×
Saravana Stores

ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்கள் தெரிவிக்கலாம்

விருதுநகர், ஏப். 13: விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு ஏப்.19ல் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினத்தில் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட அனைத்து பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் வாக்களிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஏப்.19 அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்காத நிறுவனங்கள் பற்றி புகார்களை தெரிவிக்க விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் பற்றிய புகார்களை தெரிவிக்க: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக போன் 04562-252130, தொழிலாளர் உதவி ஆணையர் செல்போன் 9445398763, 9865254003, விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வாளர் 8939862505, முத்திரை ஆய்வாளர் 9159443377 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது புகார்கள் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Labor Assistant Commissioner ,Maivizhichelvi ,Parliamentary Election ,
× RELATED அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை