×

போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம்

 

திருப்பூர், ஏப்.13: நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. இதுபோல், தேர்தல் பணியில் ஈடுபடுகிற ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கான தபால் வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுகிற மாநகரத்தில் பணியாற்றுகிற போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம் நேற்று திருப்பூரில் உள்ள தெற்கு ரோட்டரியில் நடந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு செலுத்தினர். இதனை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

The post போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு முகாம் appeared first on Dinakaran.

Tags : Postal Polling Camp for Police ,Tirupur ,Dinakaran ,
× RELATED ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் மக்கள் பயணம்