×

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கொல்கத்தாவில் கைது

பெங்களூரு: பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி 10 நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்தன. பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக முஷாமி ஷரீப் என்ற நபரை கடந்த மார்ச் 26ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு உடந்தையாக இவர் செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான முசாவீர் சாஹிப் உசேன் (30) மற்றும் அப்துல் மதீன் தாஹா (30) ஆகிய 2 பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்களில் முசாவீர் உசேன் தான் ஓட்டலில் குண்டு வைத்ததாகவும், அப்துல் மதீன் என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2020ம் ஆண்டு பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

 

The post பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 2 பேர் கொல்கத்தாவில் கைது appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Bengaluru ,Rameswaram Cafe ,Kundalahalli, Bengaluru ,Mushami Sharif ,Rameswaram ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...