×

காரில் கட்டுக்கட்டாக ரூ.2.83 கோடி சிக்கியது

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஸ்வின்குமார் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது கரூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 கோடியை 83 லட்சத்து 40 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, ஏடிஎம் மையத்தில் வைப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாக காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து ரூ.2.83 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பரமத்திவேலுார் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

 

The post காரில் கட்டுக்கட்டாக ரூ.2.83 கோடி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Election ,Squad ,Ashwinkumar ,Cauvery bridge ,Namakkal district ,Karur ,Dinakaran ,
× RELATED அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து...