×

பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு முடிவு: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ம் தேதி நடந்தது. 130 மையங்களில் நடந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதினர். இதையடுத்து, தேர்வுக்கான வினாக் குறிப்புகள் பிப்ரவரி 19ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் சந்தேகம் இருந்தால் பிப்வரி 25ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. தேர்வு முடிவுகளை ஜூன் மாதம் வெளியிட்டு, சான்று சரிபார்ப்பு நடத்தி, பணி நியமனம் செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு பட்டியல் அனுப்பி வைக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. அதற்கான போட்டித் தேர்வுக்கு 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு ஜூன் 23ம் தேதி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20ம் தேதி வரை பெறப்பட்டது.

The post பட்டதாரி ஆசிரியர் பணி ஜூனில் தேர்வு முடிவு: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Board ,Chennai ,Dinakaran ,
× RELATED குழாய் இணைக்கும் பணி அயனாவரம்...