×

நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது சுதந்திர போராட்டத்தில் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல்காந்தியை தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன் என கோவையில் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் பேசியதாவது; சோதனை காலத்தில் காங்கிரசுடன் இருக்கும் கட்சி திமுக, நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது சுதந்திர போராட்டத்தில் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளோம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ; சிஏஜி அறிக்கை குறித்து பாஜக வாய்திறக்காதது ஏன்?. ஊழலை பற்றி பேச பாஜகவிற்கு தகுதியில்லை. தேர்தல் பத்திரம் மூலம் ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜக தான்.

இந்தியா கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும். திமுகவின் சமூகநீதி கொள்கைகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழிற்சாலையை மிரட்டி குஜராத்திற்கு மாற்றியது பாஜக. பாஜக போன்ற கலவர கட்சிகளை உள்ளே விட்டால் தொழில்துறை நலிவடைந்துவிடும்; பாஜக ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என இரண்டு தாக்குதல்கள் நடந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் சுருக்கு பையில் இருந்த பணம் கூட பறிக்கப்பட்டது . பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற 2 தாக்குதல்களால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

The post நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது சுதந்திர போராட்டத்தில் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,2nd freedom struggle ,Goa ,K. Stalin ,KOWAI ,RAKULKANDHI ,INDIA ,TAMIL NADU ,GOWA ,Goa K. Stalin ,
× RELATED இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை...