- பாஜக
- கோவை ராஜ்
- பாலமகா
- செயலாளர்
- கிழக்கு
- மாவட்டம்
- கோவா
- கோவை
- கோவ கிழக்கு மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில செயலாளர்
- கோவாவின் கிழக்கு மாவட்டம்
கோவை: கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றப் போவதில்லை என கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள் புது புது யுக்திகளை கையாண்டு மக்களிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றப் போவதில்லை என கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார்.
கூட்டணி கட்சிகள் எதையும் பாஜக மதிக்காததால் தேர்தல் பணியில் இருந்து மிகுந்த மன வருத்தத்துடன் வெளியேறுகிறோம். வேட்பு மனு தாக்கல் முதல் தேர்தல் வாக்குறுதி வெளியிடும் நிகழ்ச்சி வரை எதற்குமே கூட்டணி கட்சியான பாமகவை பாஜக அழைக்கவில்லை என புகார் தெரிவித்தார். வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு கூட பாமகவை முறையாக அழைக்கவில்லை என குற்றம்சாட்டினார். கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக தேர்தல் பணியில் இருந்து வெளியேறுவதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார்.
கூட்டணி தர்மத்தைவிட சுயமரியாதை முக்கியம் என்பதால் பாஜகவுக்கு தேர்தல் பணியாற்றப்போவதில்லை என கூறினார். பாமக மட்டுமின்றி பிற கூட்டணி கட்சி தலைவர்களும் கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் மீது அதிருப்தியில் இருப்பதாக கோவை ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
The post கோவையில் பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றப் போவதில்லை: கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ் அறிவிப்பு appeared first on Dinakaran.