×

3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களில் எல்சிடி திரைகள் மூலம் இயக்கதிட்டம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது.

இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓட்டுநர் இல்லா ரயில்களின் 2025ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இயக்கப்பட உள்ளது. 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளதாவது : 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 3 வழித்தடங்களுக்கு மூன்று ஒப்பந்தங்களின் வாங்கப்படுகிறது. தானியங்கி ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மேலும் இந்த மெட்ரோவில் எல்சிடி திரைகள் வைக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைக்குட்டப்படுத்தப்படும். இந்த ரயில்களுக்கான வடிவம் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் செய்யப்படும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post 3 பெட்டிகள் கொண்ட 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களில் எல்சிடி திரைகள் மூலம் இயக்கதிட்டம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metro Rail ,Route 3 ,Madhavaram Dairy Farm ,Chiphkot ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகள் ஆகியும் சென்னை மெட்ரோ ரயில்...