×

கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான் மஸ்க்?.. கார் தயாரிப்பு தலைநகராக தமிழ்நாட்டை மாற்ற திமுக அரசு உறுதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கார் தயாரிப்புக்கு இசைவான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வாகன தயாரிப்பில் இந்தியாவின் டெட்ராய்ட் என்று ஏற்கெனவே தமிழ்நாடு அழைக்கப்பட்டு வருகிறது. மின்சார தயாரிப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிஸ்ஸான் மோட்டார், ரெனால்ட், ஹூண்டாய், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தொழிற்சாலைகள் உள்ளன.

எனவே, டெஸ்லா தொழிற்சாலையையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர உள்ள எலான் மஸ்க், இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு ஆலையை அமைக்க ஆலோசித்து வருகிறார். இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக் கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ளார். பெட்ரோல் கார் தயாரிப்பு ஆலைகளின் மையமாக திகழும் சென்னையை மின்சார கார் தயாரிப்பு ஆலைகளின் தலைநகராக மாற்ற திமுக அரசு தீவிரம் காட்டிவருகிறது. உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களின் மின்சார கார் தயாரிப்பு ஆலைகளையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

The post கார் தொழிற்சாலை தொடங்குகிறார் எலான் மஸ்க்?.. கார் தயாரிப்பு தலைநகராக தமிழ்நாட்டை மாற்ற திமுக அரசு உறுதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,DIMUKA GOVERNMENT ,MINISTER ,T. R. B. KING ,Chennai ,T. R. B. ,Tamil Nadu ,Detroit ,India ,NADU ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்