×
Saravana Stores

வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றதால் கொசுவலை உற்பத்தி அடியோடு பாதிப்பு

* தினசரி விற்பனையும் குறைந்தது
* உரிமையாளர்கள் மிகவும் கலக்கம்

கரூர்: வட மாநிலங்களில் கடுமையான வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வாக்களித்து செல்வதால்கரூரில் கொசு வலை உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக டெக்ஸ்டைல் தொழில் ,கொசுவலை உற்பத்தி , மற்றும் பஸ் பாடி கட்டுதல் ஆகிய தொழில்களில் முன்னணியில் விளங்கியது. இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கரூரில் பஸ் பாடி தொழில் முழுமையாக நலிந்த நிலைக்கு சென்று விட்டது. இருப்பினும் கரூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொசுவலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கொசு வலை தயாரிப்பு நிறுவனங்களில் மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஒடிசா, பீகார் ஆகிய மாநில தொழிலாளர்களை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களில் கரூர் நாமக்கல் மற்றும் அண்டை மாவட்டத்தில் மக்களோடு மேற்கு வங்காளம், பீகார் ,ராஜஸ்தான் சுமார் 60 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை தினசரி வேலை செய்து வருகின்றனர் . இவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்கள் கொசுவலை தயாரிப்பதற்கு பயன்படும் கச்சா பொருளாதார (ஹெச் டி பி) பொருளை மெஷினில் உருக்கி நூலாக மாற்றுகின்றனர். இவ்வாறு மாற்றப்படும் நூல்களைக் கொண்டு இரண்டு விதமான கொசு வலைகளை தயாரிக்கின்றனர். ஒருவையான கொசு வலை முழுக்க முழுக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கலக்காத கொசுவலை ஆகும். இந்த கொசு வலை பீகார், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுகிறது.

மற்றொரு வகையான ரசாயனம் கலந்த கொசுவளையானது ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. தினசரி கரூரில் நூற்றுக்கு மேற்பட்ட கொசுவை தொழிற்சாலை மூலம் தினசரி சுமார் ரூ.5 கோடி முதல்ரூ.7 கோடி வரை தினசரி கொசுவலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு டன் கொசு வலை ரூ.1.75 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெளி நாடுகளிலும் கொசுவலைக்கான தேவை குறைந்துள்ளதால். தொழிலில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் வட மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வெயில் அடிப்பதாலும் கொசுவலை கம்பெனியில் வேலை செய்வது பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் என்பதால், தற்போது பொது தேர்தலை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றுள்ளதால் தற்போது கரூரில் பெரும்பாலான கொசுவலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட கொசு வலைகள் அனைத்தும் தேக்க நிலையில் உள்ளது. இதனால் தொழிலில் முழுமையான மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த மந்த நிலை சீராக மாற மழைக்காலங்களில் பெய்ய வேண்டிய பருவ மழை முழுமையாக பெய்து செழித்தால் போதுமானது. மேலும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், சைனா ஆகிய பகுதியில் இருந்து திருட்டுத்தனமாக கொசுவலை பீகார், மேற்கு வங்காளம் ஒடிசா, ஆகிய மாநிலங்களுக்கு வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கொசு வலை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். n அண்டை நாடுகளான பங்களாதேஷ், சைனா ஆகிய பகுதியில் இருந்து திருட்டுத்தனமாக கொசுவலை பீகார், மேற்கு வங்காளம் ஒடிசா, ஆகிய மாநிலங்களுக்கு வருவதை தடுப்பதற்கு மத்திய அரசு முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கொசு வலை உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றதால் கொசுவலை உற்பத்தி அடியோடு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : northern ,Karur ,northern states ,North ,Dinakaran ,
× RELATED தீபாவளி, சாத் பண்டிகையையொட்டி கூட்ட...