- பாஜக
- அஇஅதிமுக
- Tirupathur
- கதருசென்
- Nattam
- பஜாவில் மாவட்ட நிர்வாகக் குழு
- திருப்பதி
- AIADMK இளைஞர் பாசர கண்ட்லி யூனியன்
- தின மலர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் காதர்உசேன்(30), மோட்டார் ரீவைண்டிங் தொழில் செய்து வரும் இவர், பாஜவில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் திருப்பதி(40), அதிமுக இளைஞர் பாசறை கந்திலி ஒன்றிய செயலாளராக உள்ளார். திருப்பதிக்கு சொந்தமான போர்வெல் மோட்டாரை, காதர்உசேன் பழுது பார்த்து கொடுத்துள்ளார். ஆனால் பழுது நீக்கியதற்கான ₹15 ஆயிரம் கூலியை திருப்பதி, காதர் உசேனுக்கு தரவில்லையாம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காக்கங்கரை கூட்ேராட்டில் நின்றிருந்த திருப்பதியிடம் ₹15,000யை காதர்உசேன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருப்பதி, ‘என்னிடமே பணம் கேட்கிறாயா?’ என இரும்பு ராடால் அவரது தலையில் அடித்து மண்டையை உடைத்துள்ளார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
The post பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது appeared first on Dinakaran.