×

கோயில் திருவிழா தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 15 சிறுவர்கள் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெக்கூரில் யுகாதி பண்டிகையொட்டி அங்குள்ள கோயிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்றுமுன்தினம் சுவாமி தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் மாடவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை இழுத்து வந்தனர்.

அப்போது மேலே சென்ற மின்கம்பி மீது தேர் உரசியது. இதில் தேரில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது தேரில் அமர்ந்து வந்த 15 சிறுவர், சிறுமியர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் காயம் அடைந்தனர். இதைக்கண்ட பக்தர்கள் அவர்களை மீட்டு கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் ேதரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

The post கோயில் திருவிழா தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 15 சிறுவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : temple festival ,Tirumala ,Yugadi festival ,Chinna Tekur ,Kurnool district ,Andhra ,Swami Ther Utsavam ,
× RELATED கோயில் விழா ஆலோசனை கூட்ட தகராறில்...