- அரியானா; பா.
- சிர்சா
- அரியானா
- பி.ஏ.
- ஜெயா
- அசோக் தன்வார்
- Aryana
- லோக்சபா தொகுதி
- ஜே-சார்
- அசோக் தன்வார்
- ஜனாதிபதி
- காங்கிரஸ்
சிர்சா: அரியானா மாநிலம் சிர்சா தொகுதி பா.ஜ வேட்பாளர் அசோக்தன்வாரை பொதுமக்கள் விரட்டியடித்த வீடியோ வைரல் ஆகியுள்ளது. அரியானா மாநிலம் சிர்சா மக்களவை தொகுதியில் பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அசோக் தன்வார். மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் 2009ம் ஆண்டு சிர்சா தொகுதியில் வெற்றி பெற்றார். 2014ல் அதே தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் 2014 முதல் 2019 வரை அரியானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார்.
அவரை மாற்றி செல்ஜா குமாரியை மாநில தலைவராக கட்சி மேலிடம் நியமித்ததால் காங்கிரசில் இருந்து விலகிய அசோக் தன்வார் 2024 ஜனவரி 20ம் தேதி பா.ஜவில் இணைந்தார். இதன் மூலம் சிர்சா தொகுதி பா.ஜ வேட்பாளராக அவர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்திற்கு பல வாகனங்களில் செல்லும் போது ஆயுதங்களுடன் குவிந்த பொதுமக்கள் அசோக்தன்வார் காரை குறிவைத்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இதையடுத்து அவரது காரும், அவரது காருடன் சென்ற மற்ற கார்களும் வேகமாக அங்கிருந்து சென்றன. இந்த வீடியோ தற்போது அரியானாவில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி அசோக் தன்வார் கூறுகையில் இந்த வீடியோ 3 ஆண்டுகள் பழையது. இதுபற்றி தேர்தல் ஆணைத்தில் புகார் அளிக்கப்படும் என்றார்.
The post அரியானாவில் பரபரப்பு; பா.ஜ வேட்பாளரை விரட்டி விரட்டி அடித்த மக்கள்: கார்கள் உடைப்பு appeared first on Dinakaran.