×

குள்ளநரி கூட்டத்தால் அதிமுகவை அசைச்சு பாக்க முடியாது: அண்ணாமலைக்கு ஐடி விங் பதிலடி

சென்னை: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கூட்டணியில் இருந்தபோதே அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வஞ்சத்தோடும், வன்மத்தோடும் நீங்கள்(அண்ணாமலை) சுற்றி திரிந்தது எங்களுக்கு தெரியும்,. திமுக இருந்தால் கூட பரவாயில்லை- அதிமுக அழியவேண்டும் என்று பொருள் பட பேசுகிறீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது நன்றி.

இதுதான் எங்களுக்கான Fuel., உங்களைப் போன்ற குள்ளநரி கூட்டத்தால் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது. பிரிவினைவாதம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டு அரசியல் செய்யும் உங்களை போன்ற அற்ப புத்தி கொண்ட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதிரி. இது தமிழ்நாடு, எங்க நாடு, எங்கிருந்தோ வந்த கரையான்களை இதை நாசமாக்க விடுவோமா. உங்களிடம் இருந்தும் மக்களை காப்பாற்றத் தெரியும். முடிஞ்சதைப் பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குள்ளநரி கூட்டத்தால் அதிமுகவை அசைச்சு பாக்க முடியாது: அண்ணாமலைக்கு ஐடி விங் பதிலடி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Chennai ,AIADMK Information Technology Division ,Raj Satyan ,Twitter ,DMK ,
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...