×

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள்; மோடி ரோடு ஷோ ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு.! தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை

சென்னை: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள் வைத்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் படி, மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் போலீசார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களானபாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தி.நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை ரோடு ஷோ நடத்தினார்.

இந்த ரோடு ஷோவுக்கு சென்னை மாநகர காவல்துறை 20 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர். மேலும், பிரதமரின் ரோடு ஷோவுக்கு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் ரோடு ஷோ ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகிகள் போலீசார் அளித்த 20 நிபந்தனைகளை மீறி பிரதமர் மோடியை வரவேற்க சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக கட்அவுட்கள் வைக்கப்பட்டது. உடனே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உத்தரவுப்படி தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது பேனர் அகற்றிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து பாஜகவினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

அதைதொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியான பூபதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள் கட்அவுட்கள் வைத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பாஜக நிர்வாகிகள் மீது பாண்டி பஜார் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் தேர்தல் விதிகளை மீறியதாக ரோடு ஷோ நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரதமர் கலந்து கொண்டரோடு ஷோவில் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர்கள்; மோடி ரோடு ஷோ ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு.! தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi Road Show ,Chennai ,Modi ,Mambalam ,Bandi Bazaar ,Najakhavin ,Dinakaran ,
× RELATED கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில்...