×

கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள் வர மறுக்கும் காட்டுத்தீ: இரண்டாவது நாளாக பற்றி எரிகிறது

ெகாடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக வறண்ட சூழல் நிலவி வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும், வருவாய் நிலங்களிலும், தனியார் தோட்ட பகுதிகளிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத்தீயின் கோரத்தாண்டவம் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகமாகவே உள்ளது. நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மேல்மலை பூண்டி வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ, நேற்று 2வது நாளாக தொடர்ந்து எரிந்தது.

வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த காட்டு தீயினை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மேல்மலை மன்னவனூர் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து அணைந்தது. இந்நிலையில் இதே மேல்மலை பூண்டி வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் பல ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், செடிகள், புல்வெளிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. இதுபோன்ற நேரத்தில் வனத்துறையினர் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள் வர மறுக்கும் காட்டுத்தீ: இரண்டாவது நாளாக பற்றி எரிகிறது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Ekadaikanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...