- வாரம்
- ஜெயங்கொண்டம் நீதிமன்றம்
- ஜெயங்கொண்டம்
- உச்சநீதிமன்றம் புது தில்லி
- தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவு
- அரியலூர் மாவட்டம்
- ஜெயங்கொண்டம் ஒன்றிணைந்த நீதிமன்ற வளாக
- விழிப்புணர்வு
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஏப்.11:ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வாரவிழாவையொட்டி நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு பேரணியில் நீதிபதிகள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றம் புதுடெல்லி ,தேசிய மக்கள் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, ஆலோசனைப்படி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி முனைவர் லதா தலைமையில் சமரச விழிப்புணர்வு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சட்ட விழிப்புணர்வு பேரணி ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.இப்பேரணியை சார்பு நீதிபதி முனைவர் லதா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி ராஜசேகர் மற்றும் . மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் நீதிபதிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த பேரணியில் நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை அதிகாரிகள் , பட்டியல் வழக்கறிஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பகையை துறந்து உறவை வளர்க்கும் சமரச மையத்தின் பயன்பாடுகள் பற்றி விரிவாக விளக்கி கூறினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் சமரச மையத்தின் பயன்பாடு விளக்க பதாகைகளை ஏந்தி அதனை கோஷமிட்ட பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். தொடர்ந்து பேருந்துகளில் நீதிபதிகள் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்ககோரி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமரச வார விழா சட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.