- அஇஅதிமுக
- கம்பம் சட்டமன்றத் தொகுதி
- பிறகு நான்
- தேனி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க
- தேனி கிழக்கு ஒன்றியம்
- வி.டி.நாராயணசாமி
- அனுமந்தன்பட்டி
- Pudupatti
- கேகே
- பட்டி
- நாராயணதேவன் பட்டி
- அமைச்சர்
- ஆர்.பி. உதயகுமார்
- கம்பம் சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
தேனி, ஏப். 11: தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி.நாராயணசாமி, நேற்று கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, கே.கே.பட்டி, நாராயணதேவன் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எஸ்டிகே.ஜக்கையன், முறுக்கோடை ராமர் ஆகியோருடன் சேர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: நமது கழக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி படித்தவர், பண்பானவர். அனைவரும் எளிதில் அவரை அணுகலாம். மக்கள் சேவையாற்றவே அவர் அரசியல் களத்தில் உள்ளார். இவரை எதிர்த்து டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை தூக்கிக்கொண்டு வாக்கு கேட்டு வருகிறார். 14 ஆண்டு காலம் மக்களைப் பற்றி கவலைப்படாத அவருக்கு, தேர்தலில் போட்டியிட என்ன தகுதி உள்ளது? நாடாளுமன்ற உறுப்பினராக, பதவி வகித்த அவர், இத்தனை ஆண்டு காலம் எங்கே சென்றார்? அம்மாவால் துரத்தியடிக்கப்பட்டவர் அவர். அம்மாவின் ஆன்மா அவரை மன்னிக்காது. தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை. ஒருபோதும் உங்களால் வெற்றி பெற முடியாது. இவ்வாறு பேசினார்.
பிரசாரத்தில், முன்னாள் எம்.பி பார்த்திபன், கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், கழக துணைச் செயலாளர்கள் சற்குணம், சோலைராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் இளையநம்பி, உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர்கள் கல்யாணகுமார், வினோத்குமார், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், பேரூர் கழக செயலாளர்களான அனுமந்தன்பட்டி மார்க்கண்டன், க.புதுப்பட்டி சிவக்குமார், கேகே.பட்டி பொறுப்பாளர் ரவி, கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கரிகாலன், விவசாய அணி செயலாளர் பால்பாண்டி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், கம்பம் ஒன்றிய துணைச் செயலாளர் பரணீதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post கம்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.