×

பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத்

ஜெய்பூர்: சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்துவீசியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 24 ரன்னில் (19 பந்து, 5 பவுண்டரி) வெளியேறினார். பட்லர் 8 ரன் எடுத்து ரஷித் சுழலில் வெளியேற, ராஜஸ்தான் 42 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், கேப்டன் சஞ்சு சாம்சன் – ரியான் பராக் ஜோடி அதிரடியாக ரன் குவித்தனர். பராக் 34 பந்திலும், சாம்சன் 31 பந்திலும் அரை சதம் அடித்தனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர்.

பராக் 76 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி மோகித் பந்துவீச்சில் விஜய் ஷங்கர் வசம் பிடிபட்டார். ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. சாம்சன் 68 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் உமேஷ், ரஷித், மோகித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய குஜராத் கடைசி ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 197 என்ற இலக்கை எட்டி ராஜஸ்தான் அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது. சுப்மன் கில் அதிரடியாக 72 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அடுத்ததாக சாய் சுதர்சன் 32 ரன் எடுத்தார். கடைசி வரை போராடிய ரஷித்கான் 24 ரன்னும், ராகுல் டிவேடியா 22 ரன்னும் எடுத்து குஜராத்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இதனால், ராஜஸ்தான் அணியின் பராக்-சாம்சன் ஜோடியின் அதிரடி வீணானது. ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சில் குல்தீப் சென் 3 விக்கெட், சகால் 2 விக்கெட் வீழ்த்தினர்.

The post பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத் appeared first on Dinakaran.

Tags : Barak ,Samson ,Gujarat ,Royals ,Jaipur ,Sawai Mansingh Stadium ,Jaiswal ,Butler ,Rashid ,Barak – ,Dinakaran ,
× RELATED பராக் – சாம்சன் ஜோடி அமர்க்களம்: ராஜஸ்தான் 196 ரன் குவிப்பு