×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.49% உயர்வுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பிற்பகலில் 421 புள்ளிகள் அதிகரித்து 75, 105 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 354 புள்ளிகள் உயர்வுடன் 75,038 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி பிற்பகலில் 133 புள்ளி அதிகரித்து 22,775.70 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 111 புள்ளிகள் உயர்வுடன் 22,154 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!