×

கோடை வெயில் தாக்கம்.. ஏ.சி. கருவியை 25-27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மின்வாரியம் வேண்டுகோள்..!!

திருவனத்தபுரம்: ஏ.சி. கருவியை 25-லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது.

பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தினமும் வெயில் அடிக்கிறது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக தினமும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களின் விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது. இதனால் கோடைகால தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பகலில் இருக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது.

இந்நிலையில், ஏ.சி. கருவியை 25-லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளத்தில் கடும் மின் பற்றாக்குறையால் மோட்டார் பம்ப், ஏ.சி. உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாதனை அளவாக கேரளத்தில் திங்கள்கிழமை 11 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மின்தட்டுப்பாட்டை சமாளிக்க நாளொன்றுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் வாங்க உள்ளோம் கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது.

 

The post கோடை வெயில் தாக்கம்.. ஏ.சி. கருவியை 25-27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மின்வாரியம் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : A. C. Kerala Electricity Authority ,Thiruvanathapuram ,Kerala ,Dinakaran ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...