×

கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு போலீஸ் தடை அசம்பாவிதங்கள் தடுக்க நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலையொட்டி

ேவலூர், ஏப்.10: நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 4ம்தேதி வரை வாட்டர் கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதைத்ெதாடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வேலூர் மாவட்டதில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாகன ஓட்டிகளுக்கு வாட்டர் கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற வழக்கு ெதாடர்புடைய நபர்களை கண்காணித்து வருகிறோம். குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாகவோ, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்களுக்கு வாட்டர் கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு போலீஸ் தடை அசம்பாவிதங்கள் தடுக்க நடவடிக்கை நாடாளுமன்ற தேர்தலையொட்டி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குலுக்கல் முறையில் அலுவலர்கள்...