×

ஏற்காட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

ஏற்காடு, ஏப்.10: ஏற்காடு சுற்றுவட்டார பகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கை செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்கும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக சென்று தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர். ஏற்காட்டில் நேற்று முதல் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. பதிவு செய்த வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை அதிகாரிகள் வாக்குப் பெட்டியில் சேகரித்து வருகின்றனர்.

The post ஏற்காட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : YERADU, ,ELECTORAL COMMISSION ,YERADU ,Dinakaran ,
× RELATED வார விடுமுறையையொட்டி ஏற்காடு,...