×

5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது

சென்னை: காலியாக உள்ள 5,990 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர்(கிரேடு2) பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 161 இடத்துக்கும், குரூப்-2ஏ பதவியில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) நகராட்சி பணியாளர் ஆணையர்(கிரேடு2), முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட 5,990 பணியிடங்கள் என மொத்தம் 6,151 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை 23.2.2022 அன்று அறிவித்தது.

இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு 2022 மே 21ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து முதல்நிலை தேர்வு அறிவிப்பு 2022 நவம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 58,081 பேர் முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மெயின் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடந்தது. இத்தேர்வை 51,987 பேர் எழுதினர். தொடர்ந்து ஜனவரி 11ம் தேதி குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. குரூப் 2 மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெற்று பணிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அத்தேர்வுக்கு வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தேர்வாணைய வலைதளமான www.tnpsc.gov.inல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டரை பேர் வீதம், சுமார் 14,500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

The post 5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வுக்கான ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்