- நிதிஷ் குமார் ரெட்டி
- ஐதராபாத்
- திரில்
- அர்ஷ்தீப்
- முள்ளன்பூர்
- சன்ரைஸ் ஹைதராபாத்
- ஐபிஎல் லீக்
- பஞ்சாப் கிங்ஸ்
- பஞ்சாப்
- மகாராஜா யாதவிந்திரா ஸ்டேடியம்
- டிராவிஸ் ஹெட்
- தின மலர்
முல்லன்பூர்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மகாராஜா யாதவிந்த்ரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். ஹெட் 21 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) விளாசி அர்ஷ்தீப் வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மார்க்ரம் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
அபிஷேக் 16 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), திரிபாதி 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஐதராபாத் 9.4 ஓவரில் 64 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 32 பந்தில் அரை சதம் அடித்தார். கிளாசன் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் – அப்துல் சமத் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 20 பந்தில் 50 ரன் சேர்த்து அசத்தியது. சமத் 25 ரன் (12 பந்து, 5 பவுண்டரி) நிதிஷ் குமார் 64 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் கம்மின்ஸ் 3, புவனேஷ்வர் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி பந்தை சந்தித்த ஜெய்தேவ் உனத்கட் இமாலய சிக்சராகத் தூக்க… சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. ஷாபாஸ் 14 ரன், உனத்கட் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 4, கரன், ஹர்ஷல் தலா 2, ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் மட்டுமே எடுத்து, 2 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதிகபட்சமாக சஷாங்க் சிங் 46 ரன் (25 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். அஷுதோஷ் சர்மா 33 ரன், சாம் கரண் 29 ரன் எடுத்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார். 3வது வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.
The post நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி அரைசதம்: சன்ரைசர்ஸ் திரில் வெற்றி: அர்ஷ்தீப் அசத்தல் பந்துவீச்சு வீண் appeared first on Dinakaran.