×
Saravana Stores

சில்லி பாயின்ட்…

* டி20 உலக கோப்பை ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் இமத் வாசிம், முகமது ஆமிர் தங்கள் ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு, இந்த உலக கோப்பையில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, நியூசிலாந்துடன் டி20 தொடரில் மோத உள்ள பாகிஸ்தான் அணியில் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடர் (5 போட்டி) ஏப்.18- ஏப்.27 வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, இமத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது ரிஸ்வான், முகமது ஆமிர், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சயீம் அயூப், ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, உசாமா மிர், உஸ்மான் கான், ஜமான் கான்.

* ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமாக சீனாவில் நடைபெறும் ஆசியன் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. இந்தியாவின் மாளவிகா மன்சூட் (மகளிர் ஒற்றையர்), அம்சா கருணன் – ரெத்தினசபாபதி (ஆண்கள் இரட்டையர்), சதீஷ்குமார் கருணாகரன் – ஆத்யா வாரியத் (கலப்பு இரட்டையர்) ஆகியோர் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

* ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப்கள் மோதும் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், ஆர்சனல் (இங்கிலாந்து) , பேயர்ன் மூனிக் (ஜெர்மனி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), பார்சிலோனா (ஸ்பெயின்), அத்லெடிகோ மாட்ரிட் (இங்கிலாந்து), டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் கட்ட காலிறுதி ஆட்டங்கள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளன. தொடர்ந்து 2வது கட்ட காலிறுதி ஆட்டங்கள் ஏப்.17, 18 தேதிகளில் நடக்கும்.

* சன்ரைசர்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய வனிந்து ஹசரங்காவுக்கு பதிலாக, இலங்கை சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் (22 வயது) ஒப்பந்தமாகி உள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,USA ,West Indies ,Imad Wasim ,Mohammad Amir ,World Cup.… ,Dinakaran ,
× RELATED ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை இறுதி...