×

பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தாரா ராஜீவ் சந்திரசேகர்: தேர்தல் ஆணையம் விசாரணை

புதுடெல்லி: கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை எதிர்த்து பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் கடந்த 2020-21ம் நிதியாண்டில் வரிக்கு உட்பட்ட தனது வருமானம் வெறும் ரூ.680 என்று என்றும் ஆண்டுக்கு ஆண்டு வருமானம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பல கோடி சொத்துக்களை பிரமாண பத்திரத்தில் ராஜீவ் சந்திரசேகர் தெரிவிக்காமல் மறைத்திருப்பதாக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சந்திரசேகர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் காட்டப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

The post பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்தாரா ராஜீவ் சந்திரசேகர்: தேர்தல் ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rajeev Chandrasekhar ,Election Commission ,New Delhi ,Union Minister ,BJP ,Congress ,Sasitharur ,Kerala ,Thiruvananthapuram Lok Sabha ,Dinakaran ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...