×

துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்டவர் ஆர்.எம்.வீரப்பன்: டிடிவி தினகரன் புகழஞ்சலி

சென்னை: ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கி பழகிய முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (97) சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியவர்.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணியாக உருவாக காரணமாக இருந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

டிடிவி தினகரன் இரங்கல்:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவரும், எம்.ஜி.ஆர் கழகத் தலைவருமான மூத்த அரசியல்வாதி திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்ட திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்களை இழந்துவாடும் எம்.ஜி.ஆர் கழகத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post துணிவு, கடின உழைப்பு, விடாமுயற்சிக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து உச்சம் தொட்டவர் ஆர்.எம்.வீரப்பன்: டிடிவி தினகரன் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : RM Veerappan ,DTV ,Dhinakaran Pugajanjali ,Chennai ,AAMUK ,General ,TTV Dhinakaran ,Minister ,Periyar ,Anna ,Pudukottai district ,MGR ,R.M. Veerappan ,TTV ,Dinakaran Pukhajanjali ,
× RELATED மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்: டிடிவி வலியுறுத்தல்