×

பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் கூல் சுரேஷ் பரப்புரை.. பூ விற்று வாக்கு சேகரித்தபோது வாடிக்கையாளராக மாறிய பாஜக நிர்வாகி..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் கூல் சுரேஷ் ஏதாவது வித்யாசமாக செய்ய வேண்டும் என்று காய்கறி மற்றும் பூக்கடையில் வியாபாரம் செய்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து சிரிப்பு நடிகர் கூல் சுரேஷ் வாக்கு கேட்டு சாலையோர பொரிக்கடை மற்றும் காய்கறி கடைகளில் பொது மக்களுக்கு பொரி மற்றும் காய்கறிகளை எடை போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.

திருவண்ணாமலை நகரப் பகுதியில் தேரடி வீதி, திருவூடல் தெரு, காமராஜர் சிலை, தாமரை நகர், உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தேனிமலை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வெளி ஜீப்பில் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு டீக்கடை அக்கா ஒருவர் டீ கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது டீயை வாங்கி பருகுவதற்கு முன்பாக கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீயை போடு என்று அக்காவின் பாசமான சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் டீயை குடித்தார். மேலும், பூக்கடையில் வியாபாரம் செய்தபோது பொதுமக்கள் யாரும் பூவை வாங்க வராததால் பாஜக நிர்வாகியே வாடிக்கையாளராகி பூ விலை கேட்க, இப்ப 100 ரூபாய்க்கு விற்கும் ஒரு முழம், பாஜக ஜெயிச்சா 25 ரூபாய்க்கு விற்கப்படும் என கூல் சுரேஷ் புது கதையை கூறினார்.

The post பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் கூல் சுரேஷ் பரப்புரை.. பூ விற்று வாக்கு சேகரித்தபோது வாடிக்கையாளராக மாறிய பாஜக நிர்வாகி..!! appeared first on Dinakaran.

Tags : Kool Suresh ,BJP ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Ashwathaman ,Suresh ,
× RELATED போலி ஆவணம் தயாரித்த வழக்கு: பாஜக மண்டல் தலைவர் கைது