×

சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு முன்பதிவு தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு முன்பதிவு தொடங்கியது. ஏப்.21ம் தேதி கோயில் வடக்காடி வீதியில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்து அறநிலையத்துறை, கோயில் இணையதளம் மூலம் திருக்கல்யாணத்தை தரிசிக்க முன்பதிவு செய்யலாம். இன்று முதல் 13ம் தேதி வரை ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு சித்திரை வீதியிலுள்ள விடுதியில் கோயில் பணியாளர்கள் மூலமும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Meenakshiyamman ,Sundereswarar Thirukalyanam ,Chitrai Festival ,Madurai ,Sundareswarar Thirukalyanam ,Thirukalyanam ,Vadakadi road ,Hindu Charities Department ,Meenakshiyamman- Sundareswarar Tirukalyanam ,
× RELATED கண்மாயில் மீன் திருடியோர் மீது வழக்கு