- நைட் ரைடர்ஸ்
- சென்னை
- ஜடேஜா
- சென்னை
- ஐபிஎல் லீக்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- செபக்கம் எம். ஏ.
- சிதம்பரம் அரங்கம்
- ருதுராஜ்
- தின மலர்
சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். நடப்பு சீசனில் அவர் முதல் முறையாக டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. சால்ட், நரைன் இணைந்து கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே சால்ட் டக் அவுட்டாகி நடையைக் கட்ட, கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
எனினும், நரைன் – ரகுவன்ஷி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 55 ரன் சேர்த்தது. ஜடேஜா வீசிய 7வது ஓவரில் ரகுவன்ஷி 24 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), நரைன் 27 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த வெங்கடேஷ் 3 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் மிட்செல் வசம் பிடிபட, கேகேஆர் 8.2 ஓவரில் 64 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. ரமன்தீப் சிங் 13 ரன் எடுத்து போல்டானார். அதிரடி வீரர்கள் ரிங்கு சிங் 9 ரன், ரஸ்ஸல் 10 ரன் எடுத்து தேஷ்பாண்டே வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முஸ்டாபிசுர் வீசிய கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் 34 ரன் (32 பந்து, 3 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் சேர்த்தது.
அனுகுல் 3 ரன், வைபவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா 3, முஸ்டாபிசுர் 2, தீக்ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 67 ரன் (58 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். மிச்சல் 25 ரன், சிவம் துபே 28 ரன் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா 2 விக்கெட், சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டியில் 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்தது. அதே சமயம் ஹாட்ரிக் வெற்றியுடன் உற்சாகமாக இருந்த கொல்கத்தா அணி, நடப்பு சீசனில் முதல் தோல்வியை சந்தித்தது.
The post நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு appeared first on Dinakaran.