×

யுகாதி தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: யுகாதி தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக) : தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): யுகாதி திருநாளில் ஜாதி, மத, துவேஷம் கலைந்து மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி (பாமக): தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாளைக் கொண்டாடும் அந்த மொழிகளைப் பேசும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுகாதி நாளில் தான் உலகம் பிறந்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உலகத்தை உருவாக்கிய உகாதி நாள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் வழங்க வேண்டும். அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், இன்பம், வளமை, நிம்மதி உள்ளிட்ட அனைத்தும் நிறைய வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.
ராமதாஸ் (பாமக): புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில் தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடுவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறிக் கொண்டு, தெலுங்கு, கன்னட சகோதரர்களுக்கு எனது யுகாதி வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
சசிகலா: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தமிழக மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிணைந்து அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, மொழி வேற்றுமை பாராமல் சகோதர, சகோதரிகளாய் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமையும், நட்புணர்வும் மேலும் வலுப்பெறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.
டிடிவி தினகரன் (அமமுக):யுகாதி திருநாளில் மலரும் புத்தாண்டு தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுடனான தமிழக மக்களின் ஒற்றுமையும், நட்புணர்வும் தொடரும் ஆண்டாக அமைய வேண்டும்.

The post யுகாதி தினம்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Yugadi Day ,Chennai ,Edappadi Palaniswami ,ADMK ,New Year ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்