×

ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு: இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநில நிர்வாகிகள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதகத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாவட்ட தலைவர்கள் என்.டி.மோகன், ஆதி குருசாமி, வில்லியம்ஸ், ஜெயபால், கொரட்டூர் ராமச்சந்திரன், டீக்கடை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தரம், மருந்து வணிக சங்க பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டமைக்காக நன்றி தெரிவித்ததுடன், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு: இந்தியா கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Tags : A.M. Wickramarajah ,India alliance ,CHENNAI ,Tamil Nadu Federation of Merchants Associations ,President ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,DMK ,M.K.Stalin ,Anna University ,Chennai, Tamil Nadu ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...