×

தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வு ரூ.53 ஆயிரத்தை தாண்டியது சவரன்

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிரடியாக உயர்ந்து சவரன் 53 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை கடந்த மாதம் 28ம் தேதி சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 3ம் தேதி சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை ரூ.300, ரூ.400, ரூ.500 என்று தினசரி உயர்ந்து வந்தது. இதற்கிடையில் 4ம் தேதி சவரன் ரூ.52,360க்கு விற்றது. 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதே நேரத்தில் சவரன் ரூ.53 ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,870க்கும் விற்கப்பட்டது. இது வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது. விலை உயர்வை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஏழை, நடுத்தர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்வு ரூ.53 ஆயிரத்தை தாண்டியது சவரன் appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு