×

பல லட்சம் கடன் வாங்கி பயிரிட்டும் பயனில்லை பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் தற்கொலை: தெலங்கானாவில் ஒரேநாளில் சோகம்

திருமலை: பல லட்சம் கடன் வாங்கி பயிரிட்டும் பயன் இல்லாமல், பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சிக்குடு ஸ்ரீனிவாஸ்(48), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டார். நிலத்தடி நீர் குறைந்ததால் 7 ஆழ்துளை கிணறுகளை அமைத்தார். இதனால் ரூ.6 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. ஆனால் அந்த கிணறுகளில் போதிய தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் கருகியது. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்றுமுன்தினம் தனது நிலத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் மகபூபாபாத் மாவட்டம் எர்ரச்சக்ரிதண்டாவை சேர்ந்தவர் ஜாதோத் சீனு(40). இவர் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் மிளகாய், பருத்தி பயிரிட்டார். மிளகாய் சாகுபடிக்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கி பயிரிட்டு பராமரித்து வந்தார். ஆனால் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்ந்தது. இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்றுமுன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் பெத்தப்பள்ளி மாவட்டம் லத்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உடுதா சந்தோஷ்யாதவ்(34). இவர் தனது 8 ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளார். இதற்காக ரூ.35 லட்சம் வரை கடன் வாங்கி கிணறு வெட்டியுள்ளார். ஆனால் கிணற்றில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் பயிர்கள் காய்ந்தது. மேலும் பூச்சிகளின் தாக்கமும் அதிகளவில் இருந்தது. இதனால் போதிய மகசூலின்றி விரக்தியடைந்த அவர் நேற்றுமுன்தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

The post பல லட்சம் கடன் வாங்கி பயிரிட்டும் பயனில்லை பயிர்கள் கருகியதால் 3 விவசாயிகள் தற்கொலை: தெலங்கானாவில் ஒரேநாளில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,Sikutu Srinivas ,Siddipettai District, Telangana State ,
× RELATED தெலங்கானா மருந்து கம்பெனியில்...