கொழும்பு: ஐசிசியின் வருடாந்திர மாநாடு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. வருடாந்திர மாநாட்டிற்கான சரியான தேதிகள் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் அது ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் ஐசிசியின் தலைவரின் பதவிக்காலத்தை தற்போதுள்ள இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக விரிவுபடுத்தவும், அனுமதிக்கப்பட்ட பதவிக்காலங்களின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து இரண்டாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பதவிக்காலத்தை விட, ஐசிசியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஜெய் ஷா, ஐசிசியின் தலைவருக்கான சாத்தியமான வேட்பாளராக இருப்பர் என தெரிகிறது.
இதற்கிடையில் கட்டிங்-எட்ஜ் மாடுலர் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை முடிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. அங்கு எட்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடைபெற உள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியும் (ஜூன் 9 அன்று) அடங்கும்.
The post ஐசிசியின் வருடாந்திர மாநாடு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறும் என தகவல் appeared first on Dinakaran.