×

ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு ஹாரி புரூக்கிற்குப் பதிலாக லிசாட் வில்லியம்ஸை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு ஹாரி புரூக்கிற்குப் பதிலாக லிசாட் வில்லியம்ஸை டெல்லி கேபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 17வது ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனது பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து ஐபிஎல் 2024ல் இருந்து விலகிய ஹாரி புரூக்கிற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கேபிடல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. வில்லியம்ஸ் தனது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு கேபிடல்ஸில் சேர்ந்துள்ளார். ஐபிஎல்-ல் அவர் களமிறங்குவது இதுவே முதல் முறையாகும்.

வில்லியம்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பிரிவை மேம்படுத்துவார். அதில் அவரது சகநாட்டவரான அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது, ஜே ரிச்சர்ட்சன் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர். மிட்செல் மார்ஷ் மற்றும் சுமித் குமார் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் அவர்களிடம் உள்ளனர்.

வில்லியம்ஸ் 83 டி20களில் விளையாடி 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 19.76. அவர் ஏப்ரல் 2022இல் தென்னாப்பிரிக்காவில் அறிமுகமானார். இரண்டு டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் SA20ல் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தற்போது ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

The post ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு ஹாரி புரூக்கிற்குப் பதிலாக லிசாட் வில்லியம்ஸை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி appeared first on Dinakaran.

Tags : Delhi Capitals ,Lizard Williams ,Harry Brook ,IPL ,Delhi ,Indian Premier League ,17th IPL ,India ,Dinakaran ,
× RELATED லக்னோ மீண்டும் வீழ்ந்தது; பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி