×

காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு

ஊட்டி : நீலகிாி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பா் முதல் பிப்ரவாி இறுதி வரை நிலவ கூடிய உறைப்பனி சீசன் சமயத்தில் வனங்களில் உள்ள புற்கள், செடி கொடிகள், சிறு மரங்கள் போன்றவைகள் கருகி காய்ந்து விடுகின்றன. இந்த சமயத்தில் காட்டு தீ ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீ பிடித்து எாிந்து நாசமாகி விடுகின்றன. மேலும் கால்நடைகளுக்கும் தீவன தட்டுபாடு ஏற்பட்டு விடுகிறது.

இதனால் அடுத்து வர கூடிய பருவமழையின் போது புற்கள், செடி கொடிகள் செழித்து வளர வேண்டும் என்பதற்காக, தவிா்க்க சிலா் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து விடுகின்றனர். இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக செடி கொடிகள், புற்கள் காய்ந்துள்ள நிலையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகாித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் தனியாா் அமைப்புகள் சில தங்கள் இடங்களில் காய்ந்த நிலையில் காணப்படும் புற்களை தீயிட்டு எாித்து வருகின்றனர்.

இதனால் ஊட்டி நகரில் அடிக்கடி வெண்மை நிற புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. மாறாக தீயிட்டு எாிப்பதால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுகிறது எனவும், அதுமட்டுமின்றி அவற்றில் இருந்து வரும் புகையில் இருந்து ெவளியாகும் காா்பன் டை ஆக்சைடு வாயுவால், புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகவும் அமைகிறது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், ‘‘பனி காரணமாக நீலகிாி மாவட்டத்தில் வனங்கள் காய்ந்து கருகியுள்ளன. அவ்வாறு காய்ந்த செடிகள், புற்கள் போன்றவற்றை சிலர் தீயிட்டு எாிக்கின்றனர். இதனால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அதில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வளி மண்டலத்தில் படிந்து விடுவது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக உள்ளது. காய்ந்த புற்கள், செடி கொடிகள் மக்கும் தன்மையுடைவை. அவ்வாறு மக்கிய அவற்றை இயற்கை உரமாக பயன்படுத்தலாம். மாறாக தீயிட்டு எாிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்’’ என்றனர்.

The post காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgai district ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு