×

சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கியது: அதிகாரிகள் விசாரணை

சென்னை: காசிமேடு பகுதியில் உள்ள அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் ரூ.13 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்களின் வீடுகளில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் காசிமேடு பகுதியில் உள்ள அதிமுக பெண் நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்தை தேர்தல் செய்யப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலாளர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதற்கான பணம் எனக் கூறினாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காசிமேடு புது அமராஞ்சிபுரத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரது வீட்டில் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தின் மகள் பொற்கொடி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்

The post சென்னையில் அதிமுக நிர்வாகி வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கியது: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ghazimedu ,Archetypal ,Administrator ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...