×

தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்!

காசா: காசாவின் தெற்கு பகுதியில் இருந்து படைகளை இஸ்ரேல் ராணுவம் வாபஸ் வாங்கியது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கியது. 4 மாதங்களை கடந்து நீடிக்கும் போரில் 30,000க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளை விட்டு வௌியேறி அகதிகளாக அலைந்து வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர உலகின் சில நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும். அதேபோல், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பணய கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என ஐநாவில் கடந்த 25ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் தொடங்கி சரியாக 6 மாதங்கள் நிறைவான நிலையில் பகுதியளவு திரும்ப பெற்றது. தெற்கு காசாவை நோக்கி கடந்த 4 மாதங்களாக முன்னேறி தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்பட்டது.

வடக்கு காசவை நோக்கி பாலஸ்தீனர்கள் வருவதை தடுக்க ஒரு படைக் குழுவினர் மட்டும் கான் யூனிஸ் நகரில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்! appeared first on Dinakaran.

Tags : Israel ,southern Gaza ,Gaza ,Hamas ,Dinakaran ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...