×

“ஓய்வெடுக்காம கடினமா உழைக்கறேன்” ஜூன் 4க்கு பிறகு மோடிக்கு மக்கள் நீண்ட ஓய்வு தருவார்கள்: காங்கிரஸ் நெத்தியடி பதில்

புதுடெல்லி: “ஓயாமல் உழைப்பதாக கூறும் பிரதமர் மோடி ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நீண்ட விடுமுறையில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் நவடா மாவட்டத்தில் நடந்த நேற்றுமுன்தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, “எனக்கு கேளிக்கைகள், ஓய்வு கிடையாது. நான் மக்களுக்கு உழைப்பதற்காகவே பிறந்தவன்” என்று பேசியிருந்தார்.  மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “காங்கிரசின் 5 நீதிகள், 25 உத்தரவாதங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை 10 ஆண்டுகால அநீதி ஆட்சிக்கு பிறகு இந்திய மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல்.

இந்த நம்பிக்கை உத்தரவாதங்களால் பயந்து போயுள்ள மோடி, தன் நாற்காலியை காப்பாற்றி கொள்ள ஆதாரமற்ற விஷயங்களை பற்றி பேசுகிறார். மோடியின் தொடர் பொய்களால் மக்கள் சோர்வடைந்து உள்ளனர். ஓய்வின்றி உழைப்பதாக கூறும் மோடி ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நீண்ட ஓய்வில் சென்று விடுவார். இது இந்திய மக்களின் உத்தரவாதம்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

The post “ஓய்வெடுக்காம கடினமா உழைக்கறேன்” ஜூன் 4க்கு பிறகு மோடிக்கு மக்கள் நீண்ட ஓய்வு தருவார்கள்: காங்கிரஸ் நெத்தியடி பதில் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,New Delhi ,Oyamal ,Bihar ,Navada district ,Ethiyadi ,Dinakaran ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...