×

பாஜ வேட்பாளர் மீது இடதுசாரி கூட்டணியும் புகார்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளராக ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். கடந்த 4ம் தேதி இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.29.9 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். சொந்தமாக 30 வருடங்களுக்கு முன் ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கிய 1942 மாடல் ரெட் இந்தியன் ஸ்கார்ட் என்ற பைக் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் ராஜீவ் சந்திரசேகர் சொத்து விவரங்கள் முழுவதுமாக தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் செய்திருந்தது. இந்நிலையில் இடதுசாரி கூட்டணி சார்பிலும் தலைமை தேர்தல் ஆணையரிடம் ராஜீவ் சந்திரசேகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு எதிராக கூறப்படும் புகார்களில் எந்த உண்மையும் கிடையாது என்றும், சட்டப்படி தான் தகவல்களை அளித்துள்ளேன் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

The post பாஜ வேட்பாளர் மீது இடதுசாரி கூட்டணியும் புகார் appeared first on Dinakaran.

Tags : Left Alliance ,BJP ,Thiruvananthapuram ,Union Minister of State ,Rajeev Chandrasekhar ,Left ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...