×

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம்

விழுப்புரம்: விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி எம்எல்ஏவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலருமான புகழேந்தி, நேற்று காலை காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடல் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இரவு 9.20 மணிக்கு கலைஞர் அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், புகழேந்தியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வருடன் அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அவரது உடல் நேற்றிரவு 10 மணிக்கு விழுப்புரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான அத்தியூர் திருவாதி கிராமத்திற்கு இரவு கொண்டு செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் அனைத்து தரப்பு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 9 மணியளவில் அத்தியூர் திருவாதி கிராமத்தில் உள்ள ஈடுகாட்டில், இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

The post விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் appeared first on Dinakaran.

Tags : Wickrevandi ,DMK MLA ,Villupuram ,MLA ,South District DMK ,Phugahendi ,Mundiambakkam Government Medical College Hospital ,Villupuram Artist Academy ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...