×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

 

நாமக்கல், ஏப்.7: நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 இடங்களில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்று (7ம்தேதி) திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இன்று இரவு 7 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு, ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் விடுத்துள்ள அறிக்கை: ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, இன்று மாலை 5 மணியளவில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பிரசாரம் நடக்கிறது.

இதில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, வாக்கு சேகரிக்க உள்ளார். எனவே, இக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தோழமை கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக முன்னோடிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Namakkal ,India Alliance ,Namakkal district ,Namakkal East District ,DMK ,Rajesh Kumar ,DMK Youth Team ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...