×

வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

 

கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வேளாண்மைத் துறை சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட பெரியமுத்தூர், கோதிகுட்டலப்பள்ளி, பழையபேயனப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து, விவசாயிகளிடையே துண்டு பிரசுரங்கள் விநியோகம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அத்திமுகம் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  அப்போது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வீதி வீதியாக, கடை கடையாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post வேளாண் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Agriculture Department ,Krishnagiri ,Department of Agriculture ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்