நாகர்கோவில், ஏப்.7: ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் டி ராஜசேகர் தலைமை வகித்தார். பள்ளி முதுநிலை மழலையர்கள் வரவேற்று பேசினர். விழாவில் சிறப்பு விருந்தினராக நுகர்வோர், சிவில் மற்றும் குடும்ப நீதிமன்றங்களின் நிபுணர் ஷகிலா பிரவின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். செல்போன், மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் கொடுக்காமல் தாங்களே அவர்களுடன் பேசி விளையாடி மகிழ்விக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி சிறப்பு உண்டு. அதனை அறிந்து அவற்றை மேம்படுத்த பெற்றோர்களின் துணை அவசியம்.
மேலும் குழந்தைகளுக்குத் தொடுதல் உணர்வுகளின் புரிதலையும், தனி நிலை ஒழுக்க மேம்பாடுகளையும் வளர்க்க வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினருக்குத் தலைவர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். பள்ளி முதல்வர் லிண்டா டிமாண்டி விருந்தினரை வரவேற்றுப் பேசினார். 2023-2024 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையைத் துணை முதல்வர் பியூலா ஹெலன் ராணி சமர்ப்பித்தார். மழலையர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தாளாளர் ஜனனி இமானுவேல் பரிந்துரையின் பேரில் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சாந்தி சரோஜினி அறிவுறுத்தலின் பேரில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
The post ஆல்பா பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.