×

அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் நியமனம் செய்ய கூடாது: சரத் பவார் எதிர்ப்பு

புனே: ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். புனேயில் நுழைவு தேர்வு போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் மத்தியில் நேற்று பேசிய சரத் பவார்,‘‘ இதுபோன்ற தேர்வுகள் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.தங்களின் எதிர்காலத்தை மேம்படுத்த மாணவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு கூடுதல் அக்கரையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.மகாராஷ்டிராவில் ஒப்பந்த அடிப்படையில், அரசு வேலைக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். ஆனால் 7 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம் நடத்த வேண்டும்’’ என்றார்.

The post அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் நியமனம் செய்ய கூடாது: சரத் பவார் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sarath ,Bawar ,Pune ,Sarath Bawar ,Nationalist Congress party ,Dinakaran ,
× RELATED அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும்...