×

பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் திடீரென கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த விவகாரத்தை பா.ஜ எழுப்பியது. அது பா.ஜவுக்கே பிரச்னையாக முடிய திருதிருவென விழித்த பா.ஜ இப்போது பாகிஸ்தான் பிரச்னையை தொட்டுள்ளது. பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு மண்ணில் வாழும் தீவிரவாதிகளை அழிக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும், அந்த வகையில் பாகிஸ்தானில் கடந்த 2020 முதல் 20 தீவிரவாதிகளை இந்தியா கொன்றதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், ‘இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண விரும்புகிறது. என்ன இருந்தாலும், அவர்கள் (பாகிஸ்தான்) எங்கள் அண்டை நாடு. வரலாற்றைப் பாருங்கள். இன்றுவரை நாம் உலகில் எந்த நாட்டையும் தாக்கவில்லை அல்லது எந்த நாட்டின் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை.

இதுதான் இந்தியாவின் இயல்பு. ஆனால், யாராவது இந்தியாவுக்கு கோபமான கண்களைக் காட்டினால், மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு வந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க முயன்றால், நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். பயங்கரவாதிகள் அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்றால், பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும்’ என்றார்.

The post பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது.. appeared first on Dinakaran.

Tags : BJP ,Kachchadivu ,Pakistan ,New Delhi ,Kachchidivu ,Sri Lanka ,Lok Sabha ,India ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...