×

ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்தனர்.சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை என்றனர். ஜாபர் சாதிக்் வீட்டை குடும்பத்தினர் பயன்படுத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் நேற்று அகற்றப்பட்டது. ஜாபர் சாதிக் சகோதரர் சலீம் மற்றும் ஜாபர் சாதிக் மனைவி ஆகியோர் வீட்டை திறந்து உள்ளே சென்றனர்.

The post ஜாபர் சாதிக் வீட்டில் வைக்கப்பட்ட சீல் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,CHENNAI ,Jab Sadiq ,Mylapore, Chennai ,Delhi Patiala House Court ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை