×

புகழேந்தி எம்எல்ஏ மறைவு; தலைவர்கள் இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சட்டமன்ற உறுப்பினர் என்.புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களையும் எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன. ராமதாஸ் (பாமக): இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

திருமாவளவன்(விசிக): விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளருமான புகழேந்தி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.உடல் நலிவுற்றிருந்தபோதும் தேர்தல் பணிகளில் கண்ணும்கருத்துமாகப் பணியாற்றி வந்த அவரது மறைவு திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது பெருந் துயரத்திற்குரியது. இவரது மறைவு திமுகவிற்கும், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.

The post புகழேந்தி எம்எல்ஏ மறைவு; தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Bhujahendi ,MLA ,Chennai ,Vikravandi ,Selvaperunthagai ,Congress ,N. Bhujahendi ,Assembly ,Pugahendi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி...